நீக்கப்பட்டதா முரளிதரனின் பெயர்?
Tuesday, September 12th, 2017
கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையா முரளிதரனின் தந்தை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் கலந்துரையாடி தீர்வு காணவேண்டும் என்று மல்வத்து பீட மகாநாயக்க தேரரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 2010 ஆம் ஆண்டு கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்திற்கு முத்தைய முரளிதரனின் பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோல்வியைத் தவிர்க்க போராடும் இலங்கை!
ஆப்கானிஸ்தானை வென்றது வங்களாதேஷ்!
முக்கியத்துவம் கொடுத்த வீரர்கள் மீது நடவடிக்கை!
|
|
|


