பொலிஸார் மீது வாள்வெட்டு – மாட்டினர் ரவுடிகள்!

Saturday, September 9th, 2017

கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 14 பேரில் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த யூலை மாதம் 30 ஆம் திகதி 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 14 நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் நேற்று யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் 9 பேரை மேற்குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் அடையாளம் காட்டியிருந்தனர்.மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக சந்தேகநபர்கள் 14 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106