ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது – இராணுவப் பேச்சாளர்!
Thursday, September 7th, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் குவிப்பதென்பது சாத்தியமற்றது என்று இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
45 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட யாழ். கோட்டைக்கு இராணுவத்தினர் சென்றால், அவர்கள் தங்கியுள்ள தமிழ் மக்களின் காணிகளை திருப்பிக் கொடுக்க முடியும் என அண்மையில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.யாழ். கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் குவித்து வைப்பது சாத்தியமற்றது.எனினும் அது ஆளுநரின் தனிப்பட்ட கருத்து என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொரோனா: பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் 938 மரணங்கள் பதிவு!
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டது - ஜனாதிபதி ஊட...
பொதுச் சொத்துக்களை விற்றேனும் டொலரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவி...
|
|
|


