லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Monday, September 4th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் பிரதான நபரான சுவிஸ்குமாரை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ. ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்த்ரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை இன்று (04.09) ஊர்காவற்துறை நீதிமன்றில் பதில் நீதிவான் எஸ்.சபேசன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த யூலை மாதம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருத்தமான சூழலை ஊருவாக்கி தாருங்கள் - மட்ட...
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்க...
சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே? -    வெளிப்படுத்த வேண்டும் எ...