450 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் இணைப்பு!
Monday, September 4th, 2017
மேல்மாகாண பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
நியமனங்களைப் பெறுவோருக்கு நான்கு வார காலப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.
Related posts:
வைத்தியசாலையில் நாமல்!
அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றச்சாட...
யாழ். மாநகர சபை ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்!
|
|
|


