உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் 24 இல் திருத்தத்துடன் சமர்ப்பிப்பு – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
Saturday, August 19th, 2017
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி திருத்தத்துடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அனைத்து சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளுக்கமைய அச்சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்சட்டமூலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சட்டமூலம்ளுநாடாமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
இப்படிச் செய்தாரா அமைச்சர் சஜித்தின் அப்பா?
சில இடங்களில் உச்ச வெப்பநிலை – வானிலை மையம்!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி - நிதி இராஜாங்க அமைச்ச...
|
|
|


