பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி!
Monday, August 14th, 2017
பாகிஸ்தான் – குவேட்டா நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது
இது தவிர 40 பொதுமக்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 7 பேர் பொது மக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுளள்து.
நகரத்தில் உள்ள நெரிசல் மிக்க அங்காடி ஒன்றிற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுஇந்த தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ஜ.எஸ் தீவிரவாதிகளால் விடுக்கப்பட்ட அறிக்கையின் மூலம் உரிமை கோரப்பட்டுள்ளது.
உந்துருளியில் வருகை தந்த தற்கொலை குண்டுதாரி மேற்கொண்ட இந்த தாக்குதலில் 17 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும் அநத் அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
Related posts:
தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!
எல்.ஐ.சி. கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
மீண்டும் ஈராக் - சிரியா விமானப் பயணம் ஆரம்பம்!
|
|
|


