வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை!
Wednesday, August 9th, 2017
வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக மாவட்ட அடிப்படையில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த விண்ணப்பப் படிவங்களை 21 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்டவர்கள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, முதலாம் மாடி, மிலோதா, பழைய ரைம்ஸ் கட்டிடம், பிறிஸ்டல் வீதி, கொழும்பு 01. மேலதிக விபரங்களை http://mnpea.gov.lk/ அமைச்சின் இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.
Related posts:
தாதியர்கள் சங்கம் எச்சரிக்கை!
சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் - ஐ.நா உணவு ம...
பாதீட்டுக்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்யும் பணி எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - நிதி இரா...
|
|
|
நாட்டில் தீவிரமடையும் டெல்டா - சனிக்கிழமை வருகிறது அறிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேரா...
உக்ரைன் மீதான போர் விவகாரம் - ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை!
பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை - சுற்றறிக்கையை வெளியிட கல்...


