அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!
Tuesday, August 8th, 2017
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு யாழ். பேருந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகியன ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை பெப். 4 ஆம் திகதி கையளிப்பு!
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள சீன மக்களும் சீன அரசாங்கமும் துணை நிற்கும் - இலங்கைக்கான ச...
இலங்கை சினிமாவின் இராணி மாலினி பொன்சேகா காலமானார்!
|
|
|


