சூர்யா மயக்கமுற்று வீழ்ந்தார்: முதலுதவி அளித்தார் தமிழிசை!
Monday, May 16th, 2016
மின்தடை மற்றும் கடும் மழையையும் பொருட்படுத்தாது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு விறுவிறுப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வாக்களிக்க வந்த போது மயங்கி விழுந்த காவலர் சூர்யாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்துள்ளார்.
விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடிக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாக்களிக்க வந்தார். அப்போது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் சூர்யா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
சிகிச்சைக்குப் பின் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த காவலர் மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தமிழிசை பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் இரகசிய விஜயம்?
10,000 விசாவினை அறிவித்தது கனடா!
ரஷ்ய நாட்டவர்களை மாலைதீவுக்கு பயணிக்க வேண்டாம் என இலங்கையின் ரஷ்ய தூதரகம் அறிவிப்பு!
|
|
|


