புகையிரத கட்டணங்கள் அதிகரிக்காது!

Monday, May 16th, 2016

வற் வரி 15 வீதத்தினால் உயர்த்தப்பட்ட போதிலும் புகையிரத  கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஏ.பீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்க கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

புகையிரத கட்டணங்களில் மாற்றமில்லை. ஏதேனும் காரணங்களுக்காக புகையிரத கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இதுவரையில் அவ்வாறு ஒர் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

புகையிரத பயணங்களுக்காக செலவிடப்படும் பணத்தில் 50 வீதமான பணம் எரிபொருளுக்காக செலவிடப்படுகின்றது. எரிபொருள் விலைகள் குறைவடைந்த காரணத்தினால் செலவுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

புகையிரத திணைக்களம் தற்போது வருடாந்தம் 6000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் தாமதமே பரீட்சை பெறுபேறு வெளியிட முடியாமைக்கு காரணம்  -  இலங்கை ஆசிரி...
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் !
மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விவகாரம் - தனியுரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கா...

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்’!
ஒக்டோபர் மாதம் 15 அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அ...