வரி விதிப்பு: முற்கூட்டியே தெரியப்படுத்துமாறு கோரிக்கை!
Thursday, July 6th, 2017
வரி விதிப்பு தொடர்பில் இலங்கையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை முற்கூட்டியே தெரியப்படுத்துமாறு இலங்கையில் உள்ள ஜப்பானிய முதலீட்டாளர்கள் கோரியுள்ளனர்.
ஜப்பானிய வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த வேளையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, வரி அறவீட்டு மாற்றங்களால் இலங்கையில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கின்றவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆலோசனைக்கேற்ப பணியாற்றாவிடின் சட்ட நடவடிக்கை - நீதிபதி இளஞ்செழியன்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளும் சமகால அரசியல் தொடர்பாக சூடான விவாதம் இன்று 03.11.2018 இரவு...
கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தே...
|
|
|


