தோழர் சந்திரமோகனின்  நீங்காத நினைவுகளில்…

Wednesday, July 5th, 2017

ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான தோழர் சந்திரமோகன் அவர்கள் ஈழ மக்களைவிட்டுப் பிரிந்து இன்று ஒருவருடம் நிறைவடைகின்றது. அவர் 05.07.2017 ஆம் திகதி கொழும்பில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரின் தனித்துவமான கருத்துக்களும், அவரோடு பழகிய ஞாபகங்களும் அவர் இல்லாத இடைவெளியை அதிகரித்தபடியே இருக்கின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்ட பயணத்தில் தோழர் சந்திரமோகன் அவர்களும் தோழோடு தோழ் கொடுத்து வழங்கிய பங்களிப்பு ஈடற்றவையாகும். இறுக்கமான எனது பொழுதுகளை பெரும்பாலும் இலகுவாக்கிய சிறந்த நண்பனாக தோழர் சந்திரமோகன் இருந்திருக்கின்றார்.

ஈழ மக்களின் கௌரவமான அரசியல் எதிர்காலத்திற்கான கனவை சுமந்து தனது இறுதிக்காலம்வரை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் செயற்பட்ட தோழர் சந்திரமோகன் அவர்கள் என்றும் நினைவில் நிறைந்து இருப்பார்.

Related posts:

டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூ...
எங்கள் ஒளிவிளக்கு டக்ளஸ் தேவானந்தா !யாழில் அலுவலகத்தை திறந்துவைத்து முஸ்லிம்கள் புகழாரம்!
இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத...

சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் - அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வே...
தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன் - விமர்சனங்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ள மாட்டேன் - அமைச்சர் டக்ளஸ் ...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - ஜப்பான் அரசினால் கடற்றொழில் துறைய...