நாட்டின் முக்கிய பதவிகளில் மாற்றம்!
Tuesday, July 4th, 2017
நாட்டின் நான்கு முக்கிய பதவிகளில் இன்றைய தினம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலாளர், இராணுவ தளபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட நான்கு பதவிகளிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராக உத்தியோகபூர்வமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மன்றாடியார் நாயகம் கப்பில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்
Related posts:
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைப்பு!
பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி - யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவ...
அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவர் மீது கோடாரி கொத்து!
|
|
|


