கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும்!

Saturday, July 1st, 2017

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்இந்தப் பிரச்சினை அரசாங்கத்தின் அல்லது அரசியல் கட்சிகளின் பிரச்சினையல்ல

இதனை நாட்டு மக்கள் அனைவருடைய வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி அனைவரும் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்குறித்த விடயங்கள் தொடர்பாக இதற்கு முன்னர் வெளியிட்டுள்ள சுற்று நிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும். அத்துடன், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

 

Related posts: