புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாது – ரயில்வே பொது முகாமையாளர்!
Tuesday, June 27th, 2017
ரயில் பயணக் கட்டண அதிகரிப்பு பற்றிய வதந்திகளை ரயில்வே பொது முகாமையாளர் டீ. டப்ளியு. பி. ஆரியரட்ன நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் – ரயில் வண்டிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாளொன்றில் குறைந்தபட்சம் நான்கு இலட்சம் பேர் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். இதற்கு குறைந்த கட்டணமும் ஒரு காரணம்.விரைவில் இந்தியாவிலிருந்து பவர் செட்டுக்களை தருவித்து மழைநாட்டு பாதையின் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
பல வருடங்களாக கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. ரயில் பார்சல்களுக்கான கட்டணத்தை திருத்துவது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது ரயில்வே பொது முகாமையாளர் டீ. டப்ளியு. பி ஆரியரட்ன மேலும் தொவித்தார்.
Related posts:
அரச பேருந்து சீரில்லை மக்கள் விசனம் விசனம் : தேவை என எந்தக் கோரிக்கையும் வரவஜல்லை என்கிறது கோண்டாவில...
இந்து ஆலயங்களின் பாதுகாப்பில் கவனம் - பன்னாட்டு இந்து குருமார் ஒன்றியம் அறிவித்தல்!
நாடாளுமன்ற தேர்தல் - வேட்புமனு மற்றும் கட்டுப்பணங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வெள்...
|
|
|


