தொடரை கைப்பற்றுவது யார்? இங்கிலாந்து-தென்னாபிரிக்கா பலப்பரீட்சை
Sunday, June 25th, 2017
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
கார்டிஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தென்னாபிரிக்க அணிக்கு டி வில்லியர்சும் தலைமைதாங்கவுள்ளனர்.
மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பதிவுசெய்துள்ள நிலையில் இப்போட்டியின் வெற்றி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக அமையும்.
சொந்த மண் என்பதால் இப்போட்டியில் இங்கிலாந்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கடந்த ஒருநாள் தொடரை இழந்த தென்னாபிரிக்க அணி இத்தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆகவே இப்போட்டியின் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.
Related posts:
ஒபாமாவை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு !
பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி சூட்டில் பலி!
கொரோனா தொற்று : பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு!
|
|
|


