பெற்றோல் குண்டு வீச்சு: பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
Thursday, June 22nd, 2017
யாழ். பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை(17) பெற்றோல் குண்டு வீசப்பட்டமை தொடர்பில் இளைஞரொருவர் நேற்றைய தினம் யாழ். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலோலி தென்மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் புதன்கிழமை(21) யாழ். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா...
சுகாதார துறையின் உயரதிகாரிகள் மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை - யாழ்ப்பாணத்து வியாபாரிகள் பெரும் கவலை!
|
|
|


