பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்!

Thursday, June 22nd, 2017

சீரற்ற காலநிலையால் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 58,000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்படவுள்ளன.மேலும், மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.

கொழும்பு , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் குறித்த வேலைத்திட்டம் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பணம் கொடுத்து போலியான தடுப்பூசியை பெற்று கொள்ள வேண்டாம் – பொதுமக்களிடம் ஔடத கூட்டுத்தாபனம் கோரிக்கை!
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சலுகை - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள முக்கிய இட...