இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவின் திட்டம்

Tuesday, June 20th, 2017

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் குறித்து ஆராய அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள், அவுஸ்திரேலியாவில் வெற்றியளித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கையில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய் குறித்து ஆராய அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

இதனூடாக, டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட திட்டங்களை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது

இந்தத் திட்டத்தின் மூலம் பக்டீரியாக்களை கொண்டு டெங்கு நுளம்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தோனேசியா மற்றும் வியட்நாமிலும் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்

Related posts:

நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் நே...
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் - போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக சிஐடி...
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார ...