மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்!
Tuesday, June 13th, 2017
வடக்கில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோது பாதுகாப்பு தரப்பினரின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்
மீள்குடியேற்றத்தின்போது இயற்கையை பாதுகாப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்
இந்த சந்திப்பில் காவல்துறைமா அதிபர் உட்பட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்
.
Related posts:
சமுர்த்திக் கொடுப்பனவில் முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும்!
மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய...
அம்பாறை - மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


