பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்!
Monday, June 12th, 2017
புதிதாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள அரசியல் கட்சிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக 95 கட்சிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது 16 கட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 64 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்குவதே எமது நோக்கம் - ஈ.பி.டி.பியின் யாழ்....
பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவ...
உக்ரைன் யுத்தம் - நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள் !
|
|
|


