பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- கால்இறுதிப் போட்டிக்கு கரோலினா தகுதி!
Monday, June 5th, 2017
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதிப் போட்டிக்கு கரோலினா வோஸ்னியாக்கி தகுதி பெற்றுள்ளார். பரீஸ் நகரில் இடம்பெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான போட்டி இடம்பெற்றது.
இதில் 4-வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி ரஷ்யாவின் குஸ்னெட்சோவாவை எதிர்கொண்டு 6-1, 4-6, 6-1 என்ற செட் கணக்கில கால்இறுதிக்கு தகுதிப்பெற்றார்.இதனையடுத்து, ஸ்பெயினின நடப்பு சம்பியன் கார்பின் முகுருஜா 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டினா மிலாடெனோவிச்சிடமும் , அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 2 6, 1-6 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் டைமியா பாக்சின்ஸ்கியிடமும் தோல்வியடைந்தனர்.
Related posts:
இலங்கைக்கு வந்த சோகம்: தொடரை வென்று அதிர வைத்த இங்கிலாந்து!
IPL 2018 : ஏலத்தில் 39 இலங்கை வீரர்கள்!
உலககோப்பை கால்பந்து: பிரான்ஸ்-டென்மார்க் போட்டி சமநிலை!
|
|
|


