உபுல் தரங்க விளையாடுவதற்கு தடை!
Monday, June 5th, 2017
இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்கவிற்கு சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று தென் ஆப்ரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நேற்றைய போட்டியின் போது இலங்கை அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்துள்ளமை இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் காயமடைந்துள்ளமையின் காரணமாக உப்புல் தரங்க தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய - நியூசிலாந்து கான்பூர் போட்டியில் நீஷம் இல்லை!
குசால் மெண்டிஸ் நீக்கம் : மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை!
உலகக் கிண்ண தொடரில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி!
|
|
|


