தொலைபேசி கட்டமைப்பை சீரழிக்கும் தொலைபேசி இலங்கையில் கண்டுபிடிப்பு!
Friday, June 2nd, 2017
இலங்கையில் செயற்படும் தொலைபேசி கட்டமைப்பை செயலிழக்க செய்யும் கம்பிகளற்ற தொலைபேசி ஒன்று சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி மூலம், தொலைபேசி கட்டமைப்புகளுக்கு அழுத்தம் பிரயோகித்து செயலிழக்கச் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அதனை தவிர்க்குமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பதாக ஆணையத்தின் பதில் இயக்குனர் E.M.P.K ரத்னபால தெரிவித்துள்ளார். இவ்வாறான 50 தொலைபேசிகள் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.அதனை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Related posts:
இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு வழிவகுத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே - வட...
தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாகி வருவதால் சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் - சுகாதார சேவை...
வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...
|
|
|
இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பரீட்சைகள...
நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!
வங்குரோத்து நிலை முடிவுக்கு வந்துள்ளதால் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற...


