விசா இன்றி 32 இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கியுள்ளதாக தகவல்!
Friday, May 19th, 2017
விசா காலாவதியான நிலையில் 32 இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்கள் சார்பாக பிணை வழங்கியுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.
32 இலங்கையர்கள் இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதன் காரணமாக, அந்த நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பம் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.6 தொடக்கம் 8 மாத கால அடிப்படையில் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றவர்கள், விசா காலாவதியான பின்னரும் நாடு திரும்பாமல் உள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106