இலங்கை – கனடா நேரடி விமானசேவை : அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!
Thursday, May 18th, 2017
இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நேரடியான விமான சேவையினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதிகளவிலான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்விதமான நேரடி விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை.
அதிகாரிகள் மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில் விமானசேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
இரண்டாவது தடுப்பூசியை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி சந்தர்ப்பம் – தவறாது பெற்றுக்கொள்ளு...
தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் - இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீக...
உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பவில்லை - முன்னாள் கடற்றொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!
|
|
|


