ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்தால் 17 நாடுகளில் சந்தைப்படுத்தல் வாய்ப்பு!
Monday, May 15th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெரும்பாலும் இந்த வாரம் வழங்கப்படும் என சுதந்திர வர்த்தக வலைய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
பாரிய அளவில் வரிச்சலுகைக் கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் ஆயிரத்து 400 உற்பத்திகள் 17 நாடுகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளன.
மேலும், இதனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அர்ப்பணிப்பதே எனது குறிக்கோள் - மேதினச் செய்தியில் ஜனாதிபதி
நடை பாதையில் உறங்கும் நோயாளர்கள் - இடப் பற்றாக்குறையால் வவுனியா வைத்தியசாலையில் அவலநிலை!
கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை ம...
|
|
|


