விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளுக்கு 1500 குழுக்கள்!
Thursday, May 11th, 2017
டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக 1500 குழுக்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகை காலத்தில் சேர்கின்ற உக்கிப் போகாத பொலித்தீன் உள்ளிட்ட பொருட்களை அகற்றுவதற்கும் இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர், பாடப் புத்தகங்கள் - கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்!
மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது - கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜ...
நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்...
|
|
|


