மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்தவும் – மின்சக்தி அமைச்சர்!
Monday, May 8th, 2017
தற்போதைய வரட்சி நலைமையை கருத்தில்கொண்டு மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்தி செலவீனத்தை குறைத்து தேசிய வேலைத்திட்டம் வெற்றிபெறுவதற்கு உதவி செய்யுமாறு மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய பொதுமக்களை கேட்டுள்ளார்.
இலங்கையில் 40 வீதத்திற்கும் அதிகமான மின்சாரம் நீர்மின் உற்பத்தி மூலம் பெறப்படுகிறது. இருந்த போதிலும், இலங்கைக்கு கிடைக்கின்றன மூன்று பருவகால மழை வீழ்ச்சிகளும் எதிர்பார்த்த பலனை தரவில்லை. அதனால் நீர்மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக நாடாளவிய ரீதியில் பகல் வேளையில் மின்சாரத்தின் தேவை 18 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதேவேளை இரவு நேரங்களில் மின்சாரத்தின் தேவை மேலும் பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
பெற்றோல் தாராளமாக கையிருப்பில் உள்ளது - சேமிப்பதும் சட்டவிரோத விற்பனையும் குற்றம் என இலங்கை பெற்றோலி...
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்...
பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவ...
|
|
|


