நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு செயற்பாடு இழக்கவில்லையாம்!
Monday, May 8th, 2017
நிதிமோசடிகள் தொடர்பான விசாரணைப் பிரிவு தனது செயற்பாடுகளை இழந்துள்ளது என ஊடகங்களில் படும் செய்திகளில் உண்மையில்லை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை விடுத்துள்ள பொலிஸ் தலைமையகம் ,மேற்படி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து விசாரணைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இந்நடவடிக்கைகளை செயற்றிறன் மிக்கதாக மேற்கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர், துணை அதிகாரிகள் சிலரை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இப்பிரிவின் நடவடிக்கைகளுக்கு எவ்விதமான தடைகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இம்மாதத்தில் 33000 மெற்றிக் டன் எரிவாயுவை கொண்டுவருவதே இலக்கு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் - நீதியமைச்சர் விஜயத...
சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ள இலங்கை!
|
|
|


