கோண்டாவில் தண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Saturday, May 7th, 2016
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இன்று அதிகாலை இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புகையிரதம் கோண்டாவில் பகுதியில் சென்று கொண்டிருந்தவேளை, தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் மீது புகையிரதம் மோதியுள்ளது.இதனையடுத்து, இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், விபத்துச் சம்பவம் குறித்த கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
Related posts:
மீண்டும் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு!
எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை: சாவகச்சேரியில் 25 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் - 8 ஆம் திகதி திங...
|
|
|


