இலங்கையில் 2 இலட்சம் வெளிநாட்டு பணியாளர்கள்!
Monday, May 1st, 2017
நாட்டில் அதிகரித்த தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இலங்கையில் சுமார் 2 இலட்சம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் தொழில் விஸா இல்லாமல் பணியாற்றுபவர்களும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், வெளிநாட்டு பணியாளர்களின் வருகை குறித்து ஆராய குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைத்துள்ளார். வெளிநாட்டு பணியாளர்களில், இந்திய, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சீரற்ற வானிலை: தொற்று நோய்கள் பரவும் அபாயம் - தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய அதிகாரிகள்!
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு ...
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமான சின்னங்கள் - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
|
|
|


