நாட்டில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு !
Monday, May 1st, 2017
கடந்த 4 மாதங்களில் சுமார் 40,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் 7 ஆயிரத்து 23 டெங்கு நோயாளர்கள் இணங்காணப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 39 ஆயிரத்து 313 டெங்கு நோயாளர்கள் நாடாளாவிய ரீதியில் இணங்காணப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2016ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்குள் 16 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்களே நாடாளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது!
சிறார்களிடையே அதிகம் பரவும் கண்சார்ந்த நோய் - சுகாதார தரப்பு எச்சரிக்கை!
மூன்று தசாப்த காலமாக நிலவிய அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு!
|
|
|


