36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Sunday, April 30th, 2017
சூழலை டெங்கு நுளம்பு பரவும் வகையில் வைத்திருந்த 36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
787 பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 39 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது
Related posts:
ஓட்டோ மீற்றர்: கால எல்லையில் நீடிப்பு.!
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் - பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரி...
சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


