வேறு மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் செல்வதை தடுக்க வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
Friday, May 6th, 2016
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் வேறு மாவட்டத்திற்கு கை நழுவி போகக்கூடாது என கோரி 07.05.2016 சனிக்கிழமை அமைதிப்பேரணி ஒன்றை பொது உள்ளுர் விலைபொருள் விற்பனையாளர் சங்கமும் விவசாயிகளும் , பொது அமைப்புக்களும் ஒன்றினைந்து ஏற்பாடு செய்துள்ளன.
முத்திய அரசின் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் இடப்பற்றாக்குறை காரணமாக வேறு மாவட்டத்திற்கு செல்லவுள்ளதாக அரசியல்வாதிகள் , ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தன.
எமது மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் எமது மாவட்டத்தினை விட்டு வேறு மாவட்டத்திற்கு கைமாறக்கூடாது என கோரி எதிர்வரும் 07.05.2016 காலை 9.00 மணிக்கு தினச்சந்தையிலிருந்து கச்சேரி வரை அமைதியான முறையில் பேரணியாக சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கவுள்ளதாக உள்ளுர் விலைபொருள் விற்பனையாளர் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Related posts:
இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையும் வெற்றி!
உலக வங்கியிடம் இருந்து மேலும் நிதி உதவி !
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமான சின்னங்கள் - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
|
|
|


