மேதினம்: போக்குவரத்து சபையிடம் 5,000 பஸ்கள் கோரிக்கை!
Wednesday, April 26th, 2017
மேதினக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச்செல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கை போக்குவரத்து சபையிடம் பஸ்களை கோரியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பஸ்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளுக்கும் பஸ்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, மேதினக் கூட்டங்களுக்காக சுமார் 5,000 பஸ்களை அரசியல் காட்சிகள் கோரியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 4,000 பஸ்களையே இந்த தேவைகளுக்காக ஒதுக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவை குறித்து முறைப்பாடு!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைக்கு முக்கியத்துவம் - அமைச்சரவை பேச...
நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை – யாழ்...
|
|
|


