நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட களைநாசினி பறிமுதல்
Friday, April 21st, 2017
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் 160 கொள்கலன்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட கிளைபொஸ்பேற் களைநாசினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.32 ஆயிரம் லீற்றர் கிளைபொஸ்பேற் களைநாசினியே இவ்வாறு சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த இரசாயனப் பதார்த்தம் சீனாவிலிருந்து தொழிலதிபர் ஒருவரினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்!
ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா ...
பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
|
|
|


