மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் அடுத்தவாரம் மீண்டும் திறப்பு!
Monday, April 17th, 2017
மாணவர்கள் மத்தியில் பரவிய காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைத்திய ஆலாசனையின் பிரகாரம் பல்கலைக்கழகத்தை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க கூறியுள்ளார். இதேவேளை காய்ச்சல் பரவியதன் காரணமாக மூடப்பட்ட ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீடம் உள்ளிட்ட அனைத்து பீடங்களும் நாளை (17) மீள திறக்கப்படும் என துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
தபால்துறை வேலை நிறுத்தத்தால் வறியோர், முதியோர் பெரும் பாதிப்பு!
பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தொழில்துறையை ஊக்குவிப்போம் - ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!
வீட்டுத்திட்ட பயனாளர் தெரிவில் முறையான பொறிமுறை வேண்டும் – வலி. வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தி...
|
|
|


