தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சைகளுக்கு நிர்ணயக் கட்டணம்!
Thursday, May 5th, 2016
நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் சத்திரசிகிச்சைகளுக்கு அறவிடப்படும் பணத்தை வரையறை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இத தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சினால் குழுவொன்று நியமிக்கபட்டுள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.இந்த குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் நடத்த்ப்படும் ஒவ்வொரு சத்திரசிகிச்சைகளுக்கும் தனித்தனியாக அறவிடப்படும் கட்டணம் வரையறை செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதன் ஊடாக அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் ஒரே கட்டண அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை நடத்த முடியும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.
தற்போது வெவ்வேறு தனியார் வைத்தியசாலைகளில் பல்வேறு வகைகளில் கட்டணம் அறவிடப்படுவதால் சாதாரன சத்திரசிகிச்சைகளிலும் கூட பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
இந்தோனேசியாவுக்கு பிரதமர் பயணம்!
கடந்த 40 நாட்களில் 8697 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
கட்டாய முகக்கவசம் அணியும் சட்டம் இன்றுமுதல் அமுல் : மீறினால் பிடி ஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்யப...
|
|
|
நாட்டில் ஏற்படுத்தப்ட்ட அமைதியின்மையே ஆகஸ்ட் உடன்படிக்கை செப்டம்பருக்கு சென்றுள்ளது- ஜனாதிபதி குற்றச...
விலகிச் சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயல...
இலங்கையில் 29 வீத மாணவர்கள் கல்வியை நிறுத்தியுள்ளனர் - 2003 - 2009 காலகட்டத்தில் வெற்றிகரமாக செயல்ப...


