யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

Thursday, March 30th, 2017

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே இந்த ஆசனக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வருடா வருடம் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த தருணம் இது - மனித உரிமைகள...
பணியை புறக்கணிக்காத சுகாதார சேவையாளர்களை கௌரவிக்க நடவடிக்கை - பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவ...
உலகலாவிய முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை - நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொட...