பிரித்தானியா விலகுவது உறுதியானது- கையெழுத்திட்ட தெரேசா மே!
Thursday, March 30th, 2017
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான அதிகாரபூர்வ கடிதத்தில் பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது என சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கை அதிகாரபூர்வமாக நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது கேள்விகுறியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் தெரேசா மே விலகல் கடிதத்தில் அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதம் இன்று மாலையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்கிடம் அளிக்கப்படும். பின்னர் இதற்கான அதிகாரபூர்வ பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த விடயத்தை பிரதமர் தெரேசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உறுதி செய்யவுள்ளார்.
Related posts:
கடந்த 24 மணிநேரத்தில் சிரிய அரச படைகள் மீது 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்!
பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்!
சுற்றுலாத் துறைசார்ந்த 120 மில்லியன் பேர் வேலையிழக்கும் அபாயம் – எச்சரிக்கிறது ஐ.நா!
|
|
|


