வியாபார முகாமைத்துவப் பட்டப் படிப்புக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சை!

Wednesday, March 22nd, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் வியாபார முகாமைத்துவப் பட்டப் படிப்புக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.

நேர்முகப் பரீட்சை காலை-09 மணி முதல் நிலைய மண்டபத்தில் இடம்பெறும்.

நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோருக்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதோர் எதிர்வரும்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொலைக்கல்வி நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts:


அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விரைவில் விசேட பாதுகாப்பு விதிமுறை அமைக்கப்படும் - ...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாளைமறுதினம் நாடாளுமன்றில் விவா...
2024 ஆம் ஆண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டம் - நி...