பாரிய வெடிகுண்டு தெல்லிப்பழையில் மீட்பு!
Wednesday, March 22nd, 2017
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லோடைப் பிள்ளையார் கோயில் வடக்கு வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியத் தயாரிப்பான பாரிய வெடிகுண்டு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(21) தெல்லிப்பழைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார்-25 முதல் 30 கிலோவிற்கும் இடைப்பட்ட எடையுடைய இந்தக் குண்டு கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குண்டு இருந்த இடத்தைக் குழந்தையொன்று தோண்டியதையடுத்து மேற்படி குண்டு வெளிப்பட்டுள்ளது. வெடிக்க வைப்பதற்கான தகடு குறித்த குண்டில் பொருத்தப்படாமையினால் நீண்ட காலம் குறித்த குண்டு வெடிக்காத நிலையிலிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 40 இலட்சம் தடுப்பூசிகள் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கா...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு! இந்தியாவில் பதில் விரைவில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
வலி மேற்கும் தமிழரசு வசம் - தவிசாளரானார் ஜெயந்தன்!
|
|
|
கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு த...
இலங்கை - அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் - 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெ...
திருமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை - இந்திய நட்புறவு அக்கடமி - அடிக்கல் நாட்டினார் இந்திய விமானப்ப...


