துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு…!
Sunday, March 5th, 2017
துபாயிலிருந்து இலங்கை திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்கள் அடங்கிய பயணப்பொதிகளுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை மார்ச் 8 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என்று அதிகாரிகள் தொவித்துள்ளனர்.
புதிய விதிமுறைகளின் படி பயணிகள் தங்கள் பயண உடைமைகளைக் கொண்டு செல்லும் போது புதிய விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்ட்டுள்ளது. இதற்கு அமைவாக
- ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டாது
- அதிக எடை கொண்ட பயண உடைமைகள் அனுமதிக்கப்பட மாட்டாது
- வட்ட வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டாது
- அனைத்து பயண உடைமைகளும் தட்டையானதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு;ள்ளது.
பொதிகளைப் கையாளுவதற்கு உலகத்தரம்வாய்ந்த அதிநவீன கருவியை துபாய் விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது.
இதனால் வட்ட வடிவம், ஒழுங்கற்ற மற்றும் அதிக எடை கொண்ட பெட்டிகளால் ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்யவே இந்த விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன என துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மின் புகையிரத போக்குவரத்து வருகின்றது இலங்கையில்!
நாட்டை முடக்காமல் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - சுகாதார சேவைகள் பிரதிப் பண...
இலங்கையில் கண் பார்வை இழப்போர் தொகை சடுதியாக அதிகரிப்பு!
|
|
|


