மக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி: இன்று கேப்பாபிலவு காணிவிடுவிப்பு!
Wednesday, March 1st, 2017
விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி குறித்த காணிகள் நாளை காலை 11 மணியளவில் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பகுதியில் இன்று காலை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை எல்லைப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகியிருந்தது.
இதேவேளை, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றுடன் 30 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
உர மூடைகளை அதிக விலையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை!
போதைப்பொருள் பாவனை உச்சம் - மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிர...
நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் - ஜனாதிபதி ரணில்!
|
|
|


