தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு
Thursday, April 28th, 2016
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு நேற்று புதன்கிழமை (27) இந்திய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன் தலைமையிலான பேரவையின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2.30 மணியளவில் யாழ். இந்தியத் தூதுவராலயத்தில் வைத்துத் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபினை துணைத் தூதுவர் அ . நடராஜனிடம் நேரடியாகக் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் , யாழ். இந்தியத் துணைத் தூதுவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடை...
அரச நிறுவனங்களால் 11 ஆயிரம் கோடி நட்ஷ்டம்! – நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!
வெள்ளப் பெருக்கு ஏற்படுவததை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு கொழும்பு ...
|
|
|


