பொறுப்புகளை நிறைவேற்ற முடியாதென்றால் இராஜினாமா செய்யவும் – ஜனாதிபதி!
Saturday, February 18th, 2017
தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத அனைத்து அதிகாரிகளும் தமது பதிவிகளிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வறட்சி நிலைமை காரணமாக விவசாயத்துறை எதிர்நோக்கும் தாக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மண் அகழ்வது தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு, மாதாந்தம் பத்தாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related posts:
புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் - யாழ். பல்கலை சமூகம் தெரிவிப்பு!
சர்வதேச தாய்மொழி தினம் இன்று - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் விசே...
எரிபொருள் - வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு - நாடு திரும்ப...
|
|
|
பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் சொந்த முயற்சியில் உள்ளது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்க...
உலக வங்கியின் 500 மில்லியன் டொலர் நிதியுதவி - 250 மில்லியன் டொலர்கள் கடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்...
சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப...


