கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு – வர்த்தமானி அறிக்கை வெளியீடு!
Friday, February 17th, 2017
கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், 30 ஆயிரம் ரூபாவுக்கு இருந்த கண் வில்லைகள் ஒன்றில் விலை எட்டாயிரம் ரூபா வரை குறைவடையும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். பாணந்துறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்
அரச மருத்துவமனைகளில் வருடமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் கண் வில்லைகள் விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
எந்தவொரு காரணங்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியால் புதிதாக பணம் அச்சிடவில்லை - அமைச்சரவை இணை பேச்சா...
கடந்த ஆண்டின் உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயார் நிலையில் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு...
இலங்கையில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா நடவடிக்கை - ஆராயும் சர்வதேச அணுசக்தி நிறுவனம்!
|
|
|


