ஸ்ரான்லி வீதியில் சற்றுமுன் விபத்து – ஒருவர் காயம்!
Tuesday, February 14th, 2017
யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் பார ஊர்தியும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து ஏற்பட்டமையால் ஸ்ரான்லி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Related posts:
பலாலி விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகள்!
இம்முறை 8,224 மாணவர்களுக்கு 9 பாடங்களில் ஏ!
இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் - வடமாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வை கிளிநொச்சிய...
|
|
|


